Advertisment

கள்ள உறவால் ஆத்திரம்: சேலத்தில் பெண் கழுத்து அறுத்து படுகொலை!

சேலத்தில், பெண் தொழிலாளியின் கள்ள உறவால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment

bad incident salem...police investigation

சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையம் அருகே, சேலம் & கரூர் ரயில் பாதை உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் கொண்டலாம்பட்டி புத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியம்மாள் (45) என்பது தெரிய வந்தது. இவருடைய கணவர் சாமிநாதன். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு, முனியம்மாள் தனியாக வசித்து வந்தார். தன் மூன்று குழந்தைகளையும் அவர் தனது பெற்றோரின் பாதுகாப்பில் விட்டிருந்தார்.

bad incident salem...police investigation

முனியம்மாள், கட்டட வேலைக்குச் சென்று வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.இருவருக்குமே மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதுபோன்ற சமயங்களில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்களாம். இதனால் அடிக்கடி அவர்கள் வீட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் புதிதாக ஒரு வீட்டில் இருவரும் குடியேறினர். இந்நிலையில், முனியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில்குமார், முனியம்மாளிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28, 2019) இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தடயத்தை மறைக்கும் நோக்கில், சடலத்தைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தண்டவாளம் அருகே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police love illegal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe