/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5_223.jpg)
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, குன்னத்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(44) கூலித் தொழிலாளி. இவரது மனைவி மதியரசி (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகின்றன. இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் அடிக்கடி கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் பாலமுருகனுக்கு மது அருந்தும் பழக்கமும் உள்ளது. இதனால் மதியரசி கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(27.10.2024) மதியம் பாலமுருகன், மதியரசி வேலை பார்க்கும் பள்ளிக்கு, அவரை சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் மாலை வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாலமுருகன் இருந்துள்ளார்.
உடனடியாக மதியரசி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பாலமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)