Advertisment

பாச்சலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்... சிபிசிஐடி விசாரணை தொடக்கம்!

Bachalur girl incident .. CBCID investigation begins!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பாச்சலூர் மலை கிராமத்தில் பள்ளி சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல நாட்களாக போலீசார் விசாரித்தும் இதற்கான காரணம் வெளியாகாததோடு,கொலை செய்தவர்களை தற்போது வரை போலீசார் கைது செய்யவில்லை. இது தொடர்பாக பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Advertisment

இந்நிலையில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது. சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை வரைபடமாக வரைந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெற்கு மண்டல சிபிசிஐடி மூத்த அதிகாரி முத்தரசி தலைமையில், சிபிசிஐடி எஸ்.பி சரவணன், திண்டுக்கல் இன்ஸ்பெக்டர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் பாச்சலூர் மலைப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்திலிருந்து சிறுமி இறந்து கிடந்தஇடத்தை வரைபடமாக வரைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்கள், சமையலர்கள், சிறுமியின் உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

CBCID Dindigul district Investigation
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe