மதுரை மண்டல இந்துசமய அறநிலைத்துறையில் உதவி ஆணையாளராக இருக்கும் அன்னபூரணியின் அளித்த புகாரின் பேரில் கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அறநிலையத்துறையில் பல்வேறு ஊழல் புகாரில் தொடர்ச்சியாக கண்காணிக்கபட்டு வந்த நிலையில் ஏற்கனவே சதுரகிரி மலையில் மீன் சாப்பிட்டதாக பக்தர்கள் புகார் அளித்ததை பாஜக தேசிய செயலாளர்ஹச்.ராஜா கண்டித்திருந்தார்.

Advertisment

 Bachaiyappan, co-commissioner of Hindu Religious Affairs Department arrested

மேலும் சமீபத்தில் இனை ஆணையாளரின் பிறந்தநாள் அன்று இந்து சமய அறநிலைத்துறையில் அனைத்து ஊளியர்கள் ஏதாவது அன்பளிப்பு வழங்க மறைமுக உத்தரவு போட பிறந்தநாள் அன்று மட்டும் பல லட்சம் பணமும், தங்க ஆபரணங்களும் பரிசாக பெற்றிருக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் சிக்கிருப்பதாக கூறப்படும் நிலையில்இன்று இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையாளர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சக அதிகாரியை குளியல் அறையில் வீடியோ எடுத்ததாக பெண் ஊழியர்புகார் அளிக்கபட்டுள்ள நிலையில் தற்போது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுசாத்தூர் காவல் நிலையத்தில் வைத்திருப்பதாக தெரியவருகிறது.

கடந்த 28 ஆம் தேதி பேரையூரை அடுத்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் உண்டியல் எண்ணுவதற்காக சென்ற பெண் ஊழியர் அனிதா உண்டியல் எண்ணும் பணியை முடித்துவிட்டு அந்த கோவிலில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டிருக்கும் பொழுது இணை ஆணையரான பச்சையப்பன் பேனாவில் மறைத்து வைத்திருக்கும் ரகசிய கேமராவில்வீடியோ எடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டு அதன்பேரில் தற்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisment