சேலம் அருகே துணிப்பையில் குழந்தையை புதரில் வீசிஎறிந்த சம்பவம் பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில்அரபி கல்லூரி அருகே பிறந்து சிலமணிநேரமே ஆனபெண் குழந்தையை துணிப்பையில் போட்டு காட்டுபுதரில் வீசிஎறிந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் பையை எதேர்சையாக எடுத்து பார்க்க உள்ளே குழந்தை இருப்பதை கண்டு அதிர்ந்து 108 ஆம்புலன்சிற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு சேலம் அரசுமருத்துவமனையில் சேர்த்தனர். தொப்புள் கொடிகூட அறுபடாத நிலையில் பிறந்து சிலமணிநேரமே ஆன பெண் குழந்தையை வீசியது யார்என சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.