Advertisment

அரசு மகளிர் பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Baby shower for a student at a government girls school

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று இன்ஸ்டாகிராமில் வீடியோ(ரீல்ஸ்) வெளியிட்டுள்ளனர். வீடியோவில், மாணவிக்கு வலைக்காப்பு நடத்துவதற்கான பத்திரிக்கை கார்டை போனிலேயே தயார் செய்து பள்ளியின் மேலே தளத்தில் வளைகாப்பு நடத்தத் தேவையான பொருட்களுடன், மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வேகமாகப் பரவி வருகிறது.

Advertisment

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியிடம் கேட்ட போது, இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால் நிதானமாக தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். மேலும் இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிடச் சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும் அழைத்து பேச திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.

Advertisment
students Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe