Advertisment

திருச்சி மணப்பாறை காவல் நிலையத்தில் மட்டப்பாறைபட்டியைச் சேர்ந்த கோபி என்பவரது மனைவி திவ்யா காவலராகப் பணிபுரிந்துவருகிறார். தற்போது இவர் கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி காவல் நிலையத்தில் இன்று (19.11.2021) நடைபெற்றது.

மணப்பாறை டிஎஸ்பி ஜனனிபிரியா, வட்டாட்சியர் சேக்கிழார், காவல் ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் திவ்யாவின் உறவினர்கள் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு வளையல் அணிவித்தும் தம்பதியினருக்கு சந்தனம் பூசி நெற்றித்திலகமிட்டும் வாழ்த்துகளைத் தெரிவித்து ஆசிர்வதித்தனர்.