மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு... கணவன் மனைவி மீது புகார்!

baby

மதுரையில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்தது தொடர்பாக கணவன் மனைவி மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதியினர் ரம்யா-சக்தி. இவர்களுக்கு அண்மையில் 17 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த நிலையில் இன்று அந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தைக்கு பாலூட்டும்போது மூச்சுத்திணறல் இருந்ததாக குழந்தையின் தாய் ரம்யா தெரிவித்துள்ளார்.

ஆனால் இறப்பில் சந்தேகம் இருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கணவன்-மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கருவுற்றது தொடர்பாக ஏற்கனவே ரம்யாவிற்கும்அவரது கணவர் சக்திக்கும் இடையே தகராறு இருந்து நிலையில், குழந்தை இறந்ததால் சந்தேகமடைந்து தற்போது போலீசார் குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

baby madurai police
இதையும் படியுங்கள்
Subscribe