Advertisment

108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை; மருத்துவக் குழுவுக்குப் பாராட்டு!

 baby girl was born in 108 ambulance near Sathyamangalam at midnight

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கல் கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ்(31). இவரது மனைவி ரேவதி (23). மாதேஷ் கூலி வேலை பார்த்து வருகிறார். ரேவதி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் இன்று நள்ளிரவு 1. 19 மணி அளவில் திடீரென ரேவதிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு பிரசவத்திற்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை நோக்கிக் கிளம்பிச் சென்றனர். கே.என்.பாளையம் ஸ்டேட் பாங்க் அருகே சென்ற போது ரேவதிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் 108 ஆம்புலன்சிலேயே ரேவதிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும்,சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe