திருச்சி அரியமங்கலம் பகுதி கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசு சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் போலீசார் பிறந்து சில மணி நேரங்களே ஆனதொப்புள் கொடியுடன் கூடிய இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டனர். மேலும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குப்பையில் பெண் சிசுவை வீசி சென்றது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.