baby found passed away near the sewer!

திருச்சிபாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட துரைசாமிபுரம், இரண்டாவது தெரு, எதிர்புறம் சாக்கடை ஓரத்தில் குழந்தை சிசு உடல் இறந்த நிலையில் கீழே கிடந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

தகவலறிந்தபாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை சிசு உடலை மீட்டனர். சிசு உடல் வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பது தெரியவில்லை. பிறகு சிசு உடலை அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சிசு உடலை வீசி சென்ற தாய் யார்? இந்தக் குழந்தை திருமணத்தை மீறிய உறவில் பிறந்த காரணத்தால் தூக்கி வீசிவிட்டு சென்றார்களா? அல்லது கருக்கலைப்பு செய்து அதனால் பிறந்த குழந்தையை வீசி சென்றார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.