Advertisment

கிணற்றில் மிதந்த சிசு... அதிர்ந்து போன கிராம மக்கள்!

Baby float in the well ... shocked villagers

Advertisment

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து உள்ளது சொரத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பால கிருஷ்ணன் என்பவரின் விவசாய கிணற்றில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் சிசு குழந்தை ஒன்று கிணற்றில் இறந்து கிடந்துள்ளது. விவசாய நிலத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக அங்கு சென்ற நிலத்தின் உரிமையாளர் மற்றும் அப்பகுதியில் விவசாய வேலை செய்த பொதுமக்கள் கிணற்றில் கிடந்த பெண் சிசுவை பார்த்துள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் செஞ்சி காவல்துறையினர் அந்த கிணற்றுக்கு விரைந்து சென்று இறந்த பெண் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் பிறந்த குழந்தையை வெளியே யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக கிணற்றில் வீசிவிட்டு சென்றனரா? அல்லது வேறு யாரேனும் முன்விரோதம் காரணமாக குழந்தையை திருடி கொண்டு வந்து கிணற்றில் வீசினார்களா? இப்படி இரக்கமற்ற முறையில் பெண் சிசுவைக் கிணற்றில் வீசி கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

died baby villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe