Advertisment

பூட்டப்பட்ட வீட்டின் வெளியே வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை! 

A baby boy was found outside a locked house!

விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம்அருகில் உள்ள மேல் வாளை அடுத்தபீமபுரம்பகுதியில் வசித்து வருபவர் ஏகாம்பரம்(40). இவர், கடந்தநான்குமாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் செங்கல்சூளைக்குகூலிவேலைக்குசென்றிருக்கிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவரது வீட்டு வாசலில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள்திடுக்கிட்டு அந்த வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டிருந்தது.

Advertisment

இதைக் கண்டு பதறிப்போன அப்பகுதி மக்கள் உடனடியாக அந்தகுழந்தைக்குபுட்டி பால் கொடுத்து அழுகையை நிறுத்தினர். இது குறித்துகண்டாச்சிபுரம்காவல்நிலையத்திற்குதகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பெயரில்அங்குசென்றபோலீசார்பச்சிளம் அந்த ஆண் குழந்தையை மீட்டு விழுப்புரம் குழந்தைகள் நல அலுவலருக்கும்முகையூர்வட்டார சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரமே இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இது குறித்துகண்டாச்சிபுரம்போலீசார்வழக்குப் பதிவு செய்து குழந்தையை ஆளில்லாத வீட்டு வாசலில்போட்டுவிட்டுசென்றது யார்? இந்த குழந்தையாருக்குபிறந்தது? இங்குஎப்படிகொண்டு வந்து போடப்பட்டது? இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புகேமராக்களைஆய்வு செய்து வருகின்றனர்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe