Advertisment

பிரசவ வலியில் சென்ற பெண்ணுக்கு வழியிலேயே பிறந்த ஆண் குழந்தை!

A baby boy born when the woman on the way to a hospital with pain

மணப்பாறையை அடுத்தஅடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. நிறைமாத கர்ப்பிணியான அவருக்குப் பிரசவ வலி ஏற்படவே, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

இதையடுத்து, ரேவதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார். புத்தாநத்தம் அருகே சென்றபோது வலி அதிகரிக்கவே, சில நிமிடங்களில் ரேவதிக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் அவசரகால மருத்துவ நிபுணர் மணிமேகலை பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்தார். தாய், சேய் இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

trichy woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe