Advertisment

108 ஆம்புலன்ஸ்சில் பிறந்த குழந்தை: குவியும் பாராட்டு

 108 Ambulance

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே புல்லம்பாக்கத்தில் மணிமேகலா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் 108 அவசர ஊர்தியை தொடர்பு கொண்டு,தகவல் சொல்லியுள்ளனர். தகவல் அறிந்த அவசர ஊர்தியின் ஓட்டுநர் பழனிவேல், மருத்துவ உதவியலாளர் கோப்பெருந்தேவியுடன் புல்லம்பாக்கத்திற்கு சென்றார்.

Advertisment

அவரை வாகனத்தில் ஏற்றிவாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டார். போகும் வழியிலேயே திருமுக்கூடல் அருகில் மணிமேகலாவுக்கு பிரசவ வலி அதிகம் ஏற்பட்டதால் வாகனத்திலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அவர்கள் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த தகவல் வாட்ஸ் அப்புகளில் பரவியதால், மருத்துவ உதவியாளருக்கும், தாய் - சேயுக்கும் பாராட்டு குவிகிறது.

108 ambulance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe