தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாககாவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் தாயைபார்த்துக்கொள்வதுபோல் பாசாங்கு செய்து, தாய் கழிவறை சென்றபோது குழந்தையை பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில்போலீசார்தனிப்படைஅமைத்து விசாரித்து வந்தநிலையில் தற்பொழுது இது தொடர்பானசிசிடிவிகாட்சிகளைபோலீசார்கைப்பற்றியுள்ளனர். அதில் பெண் ஒருவர் சாவகாசமாக குழந்தையைத்தூக்கிக்கொண்டுஆட்டோவில்குழந்தையைக்கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
45 வயது மதிக்கத்தக்க அந்த பெண் கையில் உள்ள பையில்குழந்தையைப்போட்டுஎடுத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் மருத்துவமனை வளாகத்தில்குழந்தையைப்பையில் போட்டுஎடுத்துக்கடத்தி செல்லும்சிசிடிவிகாட்சிகளைக்கைப்பற்றியுள்ளபோலீசார்அந்த பெண் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.