பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேற்று லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட32 பேர் மீதானகுற்றச்சாட்டுக்கு சரியான ஆதாரம் இல்லை என்று தெரிவித்து அவர்களைவிடுதலை செய்வதாக அறிவித்தது.
இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கிய தீர்ப்பை கண்டித்து, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் கறுப்புக்கொடி ஏந்தி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.