பாபர் மசூதி தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்றும், நீதிக்காக குரல் கொடுப்போம் என்றும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மூலம் சிதம்பரத்தில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்த ஆர்ப்பாட்டத்தின் சுவரொட்டிகள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Advertisment

babri masjid issue

இதனை அறிந்த மங்கலம்பேட்டை காவல்துறையினர் சுவரொட்டிகள் ஒட்டிய மூன்று நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உள்ளோர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சுவராட்டிகள் கிழிக்கப்பட்டதால், காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் மூலம் சுவரொட்டிகளை ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.