Advertisment

அம்பேத்கரின் 129-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் மரியாதை!

இன்று (14-04-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவரதுதிருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து - மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

dmk

பின்னர் அவர் இதுகுறித்து முகநூலில், சமத்துவம் என்ற உணர்வையும், தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திய அண்ணல் அம்பேத்கரின் 129வது ஆண்டு பிறந்தநாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.

அறிவையும், கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை. சமத்துவம், ஜனநாயகம் இரண்டையும் தமது கண்களாகப் போற்றியவர். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

ambedkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe