Skip to main content

ரஜினியின் தளபதியாகிறாரா மு.க.அழகிரி..?

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

தென்மாவட்ட அரசியலை தன் கண் அசைவில் வைத்திருந்தார் திமுகவின் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி. 2012ல் அவரது ஆதரவாளர்களின் ''இனி ஒரு விதி செய்வோம்'' என்ற போஸ்டர் நகரெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்த, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் திமுக தலைமை அனுப்ப அடுத்தடுத்து அழகிரியின் கோபம் ஸ்டாலின் மீது திரும்பியது. ''தலைவராக கலைஞரை மட்டும்தான் ஏற்றுகொள்ளமுடியும் அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துபார்க்க முடியவில்லை'' என்று நேரில் கலைஞரிடமே வாக்குவாதம் முற்றியதாக செய்திவர தொடங்கியது. கடைசியாக அழகிரி கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்ட பின்பு எப்படியும் மீண்டும் அவரை கட்சியில் சேர்த்துவிடுவார்கள் என்ற அசராத நம்பிக்கையில் அவரின் ஆதரவாளர்கள் இருந்தனர்.

 

rajni

 

கலைஞரின் மறைவின்போது ஒன்றாகிவிடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். கலைஞரின் உடல் அடக்கத்தின்போது, ஸ்டாலினும் அழகிரியும் அருகருகே இருந்தது, தேசிய கொடியை தம்பிக்காக விட்டுகொடுத்தது போன்ற விஷயங்கள் எல்லோராலும் உற்றுநோக்கவைத்தது. இதற்கிடையில் ரஜினி கலைஞரின் உடலை பார்க்க வந்தபோது அழகிரியை தேடிபோய் பார்த்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசபட்டது. இவ்வளவு நடந்த பிறகும் அழகிரியை சேர்பது பற்றி யாரும் பேசாதது அழகிரிக்கு ஏமாற்றமாக இருந்தது. பல லட்சம் பேரை திரட்டி மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணியாக செல்ல வைத்தது. அதுவும் எதிர்பார்த்தபடி அமையாததால் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் ஆதரவாளர்கள் அவரை விட்டு விலக விலக விரக்தியின் விழும்பிற்கே சென்ற அழகிரி, திமுகவுக்கு எதிரான கருத்தை மீண்டும் எழுப்ப தொடங்கினார்.
 

இந்திலையில் அவருடன் எப்பவும் கூடவே இருக்கும் மன்னனே தீடீரென ஸ்டாலினை சந்திப்பதாக செய்தி பரவ அவரை தொடர்புகொண்ட அழகிரி, ''ஏன்யா என்னாச்சு'' என கேட்க, ''அப்படியெல்லாம் இல்லை அண்ணே... நான் என்றும் உங்ககூடதான் என் சாவுவரை என அவர் சொல்ல'', ''கொஞ்சம் பொறுமையாக இருங்க முக்கிய நகர்வு இருக்கு''... என்றதாக அவரின் நட்பு வட்டாரத்தில் விசயம் பரவி அது பத்திரிக்கைக்கு வந்தது.
 

அது பற்றி அவரின் முகாமில் உள்ளவரிடம் என்னதான் செய்யபோகிறார் அழகிரி? என நாம் கேட்டோம், துரையின் சொத்துக்கள் முடக்கம் என்று நீதிமன்ற அறிவிப்புக்குப் பிறகு அழகிரி ரொம்ப அப்செட்டில் கொடைகானலில் இருக்கிறார். அங்கு முக்கிய ஆடிட்டர் அவரை சந்தித்ததாக சொல்கிறார்கள். இந்த சமயத்தில்தான் ரஜினி தன் ரசிகர்களுக்கு ''சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள்'' என அறிக்கை விட்டார். அடுத்த  சில மணி நேரங்களில் அழகிரியோடு நெடுநேரம் பேசியதாக சொல்லபடுகிறது. இதற்கு பாஜகவும் பச்சைக் கொடி காட்டியதாகவும், தமிழகத்தின் திராவிட கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான கலைஞரின் மூத்த வாரிசை ரஜினியின் தளபதியாக நிறுத்தி திமுகவிற்கு சரியான நெருக்கடியை கொடுக்க இதை விட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது. அழகிரியை பாஜகவுக்கு எவ்வளவோ பேசிப்பார்த்தும் கலைஞரின் மகனாக இருப்பதால் என்னால் பா.ஜ.கவிற்க்கு வரமுடியாது என்று சொன்னதனால் இந்த மூவ் வை பாஜக கையில் எடுத்திருப்பதாக சொல்லபடுகிறது.

 

azhagii

 

அழகிரி முகாமில் உள்ள தளபதிகளில் ஒருவரிடம் பேசினோம் ”அண்ணே எப்பவுமே ரஜினியோடு நெருக்கமாக இருப்பவர் சென்னைக்கு போறபோது கட்டாயம் ரஜினியை பார்க்காமல் வருவதில்லை. இப்போது அடிக்கடி ரஜினியோடு பேசுகிறார். அதுமட்டும் உண்மை. மதுரையில் இருக்கும் போது பேட்டை படத்தின் முதல் ஷோ பார்த்துவிட்டு நெடுநேரம் பேசி கொண்டு இருந்தார்.
 

சொல்லமுடியாது எதுவும் நடக்கலாம் ”அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு அழகிரி அண்ணே தயாராவது மட்டும் புரியுது அடுத்த ரவுண்டு மிக பெருசா அடி எடுத்து வைக்கபோகிறார் அதில் எங்களோடு தமிழகத்தின் மிக மிக முக்கிய தலைவர்கள் கைகோர்பார்கள் அது மட்டும் நிச்சயம். தேர்தல் வேலைகளில் அண்ணனை அடிச்சுக்க முடியாது. யாரை தூக்கணும் யாரை சேர்க்கனும் எல்லாம் அண்ணனுக்கு அத்துபிடி. அது தனது அப்பா கலைஞரிடமிருந்து அரசியல் காய் நகர்த்தலை கத்து கொண்டவர். புலிகுட்டிக்கு பாய கத்துகொடுக்கணுமா? பாருங்க அடுத்த சட்டமன்ற தேர்தல் தமிழகத்திற்க்கு ஒரு வித்தியாசமான தேர்தலாக அமையும் அதில் அண்ணனின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார்.
 

நாம் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் [தனது பெயரை போடவேண்டாம் என கேட்டுக்கொண்டார்] நம்மிடம், நீங்கள் சொல்வது என் காதுக்கும் வந்தது. ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆலோச்னையின்படி, எங்கள் தலைவரின் அரசியல் தளபதியாக அழகிரி களத்தில் இறங்கபோகிறார் என்ற தகவல் வந்தவண்ணம் இருக்கிறது.

 

azhagiri


அப்படி ஒன்று நடந்தால் தென்மாவட்டம் மட்டுமில்லை. தமிழக முழுவதுமே ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும். தமிழகத்தின் தவிற்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த கலைஞரின் மேல் தலைவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. முறையாக தலைமையிடத்தில் இருந்து அறிவிப்பு வரட்டும். இப்போதுதான் அதுவும் கண்ணா லட்டு திண்ண ஆசையா என்பதுபோல் இப்ப ரெண்டு லட்டு திண்ண ஆசை அதிகரிச்சு சுறுசுறுப்பா களத்தில் இறங்க தயாராக இருக்கிறோம் ரஜினி ரசிகர்களுக்கு புது நம்பிக்கை பிறந்திருக்கு சார் என்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார். 

Next Story

“சிந்தனையில் நேர்மை இருந்தால் மன நிம்மதியாக வாழ முடியும்” - நடிகர் ரஜினிகாந்த்

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Actor Rajinikanth wishes his pongal celebration

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மதுரை மாவட்டம், அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த போட்டியைக் காண ஏராளமான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று இந்த பொன்னாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை சந்தோஷமாக நிம்மதியாக இருக்கும்” என்று கூறினார்.