Advertisment

'கடலூரில் மழைநீரை வடியவைக்க போர்க்கால நடவடிக்கை' -  ஐயப்பன் எம்.எல்.ஏ

Ayyappan MLA said Wartime operation to drain rainwater in Cuddalore

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. மேலும் வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறி சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கனா குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், விக்னேஸ்வரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

Advertisment

மழைநீர் சூழப்பட்ட இடங்களை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தண்ணீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கு வீடுகளில் தங்க முடியாதவர்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர்.

Advertisment

குடிகாடு புயல் பாதுகாப்பு மையத்திலும், கந்தசாமி மகளிர் கலைக் கல்லூரியில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இதனை தொடர்ந்து அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு பொது மக்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதை ஆய்வு மேற்கொண்டனர். மழையில் தண்ணீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போர்க்கள அடிப்படையில் மீட்ப பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐயப்பன் எம்.எல்.ஏ கூறினார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சரண்யா, கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு உட்பட பலர் உடன் இருந்தனர்.

Cuddalore flood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe