Accident

கார்த்திகை மாதம் தொடங்கி இருக்கும் நிலையில் சபரிமலை சீசன் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அச்சன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் தென்காசி மாவட்டத்தின் தேன்போத்தை பகுதியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேன் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஆறு ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.