Advertisment

ஐயப்ப பக்தர்கள் கார் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

Ayyappa devotees' car overturned and 8 people lost their lives

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் ஒரு காரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஐயப்ப பக்தர்கள் வந்த கார் குமுளி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தபோது எஸ் வளைவு தாண்டி பென்ஸ்டாக் குழாய் அருகே வரும்போது நிலைத் தடுமாறி 40 அடி பள்ளத்தில் இருந்த பென்ஸ்டாப் குழாயில் தண்ணீர் வரும் மெகா சைஸ் பைப் மீதுவிழுந்து விபத்து ஏற்பட்டது.

Advertisment

இந்த விபத்தில் காரில் வந்த சிவகுமார்,வினோத், நாகராஜ், கோபாலகிருஷ்ணன், கன்னிச்சாமி, கலைச்செல்வன், தேவதாஸ், முனியாண்டி ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜா, ஹரிஹரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

இது குறித்து தகவலறிந்துசம்பவ இடத்திற்கு விரைந்தபோலீசார், இறந்தவர்களின் உடல்களையும் மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களையும்மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துதேனி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர்ஐ.பெரியசாமிக்கு தெரியவர, அவர் உடனே ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மற்றும் ஆட்சியர் முரளிதரன் ஆகியோரை நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும்படியும், தேவைப்படும் உதவிகளைச்செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து, அமைச்சர் ஐ.பெரியசாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Theni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe