Ayyakkannu, the leader of the agricultural union, condemns VM Singh !!

திருச்சியில் நடைபெற்ற மாநில விவசாயிகள் சங்ககூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது,"விவசாயிகள் தொடர்ந்து போராட்டக்களத்தில் நிற்கும் நிலையில் டிராக்டர் பேரணியில் டெல்லி போலீஸ் நடந்துகொண்ட அராஜகமான செயலை கண்டித்து பல்வேறு விவசாயச் சங்கங்களும் பல்வேறு தலைவர்களும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், அகில இந்திய கிசான் சங்கர்சல் கோ ஆடினேட் கமிட்டியில், டெல்லி காந்தி அமைதி கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில், 20 அமைப்பாளர்களை இந்த கமிட்டியில் சேர்த்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவாக ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இதில் வி.எம். சிங் என்ற சட்டமன்ற உறுப்பினரும் அமைப்பாளராக இருக்கிறார்.20 அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கக்கூடிய அவர், '3 வேளாண் சட்டத்தை திரும்பப்பெற நடக்கும் போராட்டத்தில், இந்த கமிட்டி கலந்து கொள்ளாது' என்று அறிவித்து இருப்பதை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்வன்மையாகக் கண்டிக்கிறது.

20 அமைப்பாளர்கள் அடங்கிய இந்த கூட்டு நடவடிக்கை குழுவில் தன்னிச்சையாக தன்னுடைய அறிக்கை கொடுத்து யாரிடமும்கலந்தாலோசனைசெய்யாமல் இப்படிப்பட்ட ஒரு தகவலை கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஒருபோதும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தொடர்ந்து விவசாயிகளுடைய போராட்டம் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் என்றும் இதன் மூலம்தெரிவிக்கிறோம்" என்றார்.

மேலும், மத்திய அரசைக் கண்டித்துவிவசாயிகள் ஒன்றுசேர்ந்து திருச்சியிலிருந்து புறப்பட்டு டெல்லிக்குச் சென்று அங்குத் தற்கொலை போராட்டத்தை நடத்துவதற்குஎங்களைத் தயார்செய்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.