Advertisment

காவிரி ஆற்று மணலில் புதைந்து சிறுநீர் குடிக்கும் நூதன போராட்டம்!!

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கங்கத்தின் மாநிலதலைவர் P. அய்யாக்கண்ணு ஏற்கனவே விவசாயிகளுக்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினார். மோடி சந்திக்க மறுக்கிறார் என்று நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கினார். அதேபோல்எம்பி. தேர்தலில் மோடிக்கு எதிராக 100க்கு மேற்பட்ட விவசாயிகள் எதிர்த்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்துபிறகு அமிர்ஷா பதில் திருப்தி அளிக்கிறது என்று சொல்லி பின்வாங்கினார்.

Advertisment

ayyakannu leads the protest in kaveri river

அதன் பிறகு தேர்தல் முடிந்த பிறகு தற்போது அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலையில் காவிரியில் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காதத்தை கண்டித்து, ஒவ்வொரு வருடமும் காவிரியில் குறுவை சாகுபடிக்காக கர்நாடகா அரசு தமிழகத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது முறை, ஆனால் பல வருடங்களாக கர்நாடகா அரசு தமிழகத்தை முற்றிலும் தண்ணீர் கொடுக்காமல் வஞ்சிக்கிறது.

Advertisment

ayyakannu leads the protest in kaveri river

காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை பிறப்பித்தும் கர்நாடகா அரசு அதனை துளியும் மதிக்காமல், தொடர்ந்து தண்ணீர் தர மறுக்கிறது, உடனடியாக கர்நாடகா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இல்லாவிடில் தமிழக விவசாயிகளை காவிரி ஆற்றுக்குள் கொன்று புதைக்க வேண்டும் என்ற கோசமுழகத்துடனும், காவிரியில் கர்நாடகா அரசு தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய காவிரியில் விரைந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் மரவனூர் செந்தில், ஜான்மெல்கியோராஜ், செல்லையா பிள்ளை, செய்தித்தொடர்பாளர் பிரேம்குமார், பழனிசாமி, பரமசிவம், ராஜவேல் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டு திருச்சி-காவிரி ஆற்றுக்குள்ஓயாமெரி சுடுகாடு அருகில் மணலில் புதைந்து மனித சிறுநீர் குடிக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது, கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கொண்டு வந்திருந்தார்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடத்தியவர்கள் கடைசியில் கோட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வந்து அனைவரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தவும் கலைந்து சென்றனர்.

ayyakkannu karnataka tamil nadu kaveri issue protest
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe