Advertisment

"ஜனவரி 2 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்"-அய்யாக்கண்ணு

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பத்திரிக்கையாளரை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதல்வர் இது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

Advertisment

ayyakannu-announcement-Farmers protest

நீர் மேலாண்மைத் திட்டத்தில் வளமாக இருக்கும் மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. அதனால் இங்கும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சேர்க்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு குறித்து பேசிய அரசு, தற்போது அது குறித்து பேசமறுப்பதற்கு காரணமே மரபணு மாற்றப்பட்ட விதைகள்தான். வெங்காயத்திற்கு உரிய விலை வேண்டும், அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தச் சென்றோம். அங்கிருந்து திருச்சியில் போராட்டம் நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார்கள். திருச்சியில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதிவரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி காவல் துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. போராட்டத்திற்கு அனுமதி மறுத்தால் இல்லை என்றால் சென்னைக்குச் சென்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும்" என்று அறிவித்தார்.

Ayyakannu farmland protest
இதையும் படியுங்கள்
Subscribe