
தேர்வு எழுத அனுமதிக்காததை கண்டித்து ஆயுா்வேத கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவா்களின் உள்ளிருப்பு போராட்டத்துக்கான காரணத்தை நம்மிடம் கூறிய மாணவா்கள்..
ஓரு செமஸ்டரில் இரண்டு பாடங்கள் தோல்வியடைந்தால் அந்த மாணவர்களுக்கு பிரேக்கிங் சிஸ்டம் எனும் ஒரு முறையை கொண்டு வந்து அவர்களை ரெகுலர் மாணவா்களுடன் உட்கார வைக்காமல் தனிமைப்படுத்தி தனி அறையில் தனி ஆசியர்களை வைத்து வகுப்பு நடத்துகின்றனர்.
இந்த முறையை ரத்து செய்ய கேட்டு நான்கு மாணவா்கள் மதுரை ஐககோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தனா். இது தேசிய அளவில் உள்ள பிரச்சினையாக இருப்பதால் உடனே ரத்து செய்ய இயலாது என கோர்ட் மறுப்பு தெரிவித்தது.
மேலும் மாணவா்கள் வழக்கு தொடா்ந்ததால் அதற்காக அந்த மாணவா்களை தேர்வு எழுதுவதற்கு கல்லூரி நிர்வாகம் தடுக்க கூடாது என்று உத்தரவையும் கோர்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில் இன்று தேர்வு எழுத வந்த அந்த நான்கு மாணவா்களையும் கல்லூரி முதல்வர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதை கண்டித்தும் உடனே எங்களோடு அந்த நான்கு பேரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென்று 150 மாணவர்கள் கருப்பு துணி கட்டி தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.