Advertisment

அயோத்தி தீர்ப்பு... மதுரை ஆதினம் கருத்து 

Madurai Adheenam

Advertisment

அயோத்தி தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இதுதொடர்பாக கூறுகையில், அயோத்தி பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் இந்துக்கள் முஸ்லிம்கள் பெருமக்களுக்கு பெருத்த மகிழ்ச்சி கிடையாது. இஸ்லாமியர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான மூன்று மாதத்திற்குள் ஒரு குழு அமைக்க வேண்டும். இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அனைத்து அரசியல்வாதிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். தேசிய ஒற்றுமையை தீர்ப்பு அளித்துள்ளது. இந்து முஸ்லிம் மக்கள் ஏற்று பெருமையாக இருக்க வேண்டும். 5 நீதிபதிகள் தீர்ப்பில் நியாயமாக வழங்கியுள்ளனர். பாரபட்சமின்றி 130 கோடி மக்களும் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Ayodhya Comment Madurai Adheenam
இதையும் படியுங்கள்
Subscribe