அயோத்தி தீர்ப்பிற்கு அனைத்துத்தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு அனைத்துத்தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும். இந்தியர் என்ற உணர்வு அனைவரிடத்திலும் மேலோங்கி இருப்பதால் மத நல்லிணக்கம் பேணிக்காக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு எல்லா வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் கொடுக்கும் மதிப்பு இந்தியாவை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். ஒற்றுமை உணர்வுடன் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.