ayodhya babri masjid lucknow cbi court judgement dmk mk stalin

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் எல்.கே.அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்பட அனைவரையும் விடுதலைசெய்து லக்னோ சி.பி.ஐநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாபர் மசூதி இடிப்பு பற்றி நிரூபிக்க முடியாமல் சி.பி.ஐதோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு ஏற்பட்ட தலைகுனிவு. குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல் சி.பி.ஐதோற்றிருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு. எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும், ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் சட்டவிரோத செயலாகும். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நியாயமாகச் செயல்பட வேண்டிய சி.பி.ஐ.,ஏனோ தவறி கூண்டுக்கிளியாக மாறிவிட்டது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தனது கடமையை சி.பி.ஐதுறந்திருப்பது ஆழ்ந்த கவலையைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Advertisment