style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த ஜூலை 17 -ஆம் தேதி அயனாவரம் குடியிருப்பில் சிறுமி ஒருவர்அந்த குடியிருப்பிலேயே பணியாற்றும் ஊழியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகஅயனாவரம் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 17 பேர் மீதும் குண்டாஸ் பாயவேண்டும் என கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் கடிதம் அளித்திருந்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இதனை அடுத்து குற்றம்சாட்டப்பவர்கள் மீதுகுண்டர் சட்டம் போடப்பட்டது சரியான நடவடிக்கைதான் என நேற்று மாலை அறிவுரைகழகம் அறிவித்துகுண்டர் சட்ட நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.