Advertisment

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு; சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!!

 Petition dismissed !!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என கோரியமனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Advertisment

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேரும் குண்டர்தடுப்புச் சட்டத்தில் சிறையில் உள்ளனர். 17 பேர் மீதும் குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரி என்று அறிவுரைக்கழகம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் 17 பேரையும் நேற்றுமகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் போலீசார். 14 பேருக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே, அவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 3 பேருக்கு சொந்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். நீதிமன்ற அறைக்கதவுகள் மூடப்பட்டு 17 பேரிடமும் நீதிபதி மஞ்சுளா விசாரணை நடத்தினார்.

அப்போது 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் மாநில காவல் துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். எனவே இந்த வழக்கைசிபிஐ விசாரணைக்கு விடவேண்டும் என்று இந்த வழக்கில் கைதாகியுள்ளவர்களில்14 பேர் கொடுத்தமனுவை இன்றுநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

CBI child Sexual Abuse ayanavaram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe