Advertisment

60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்தவன் தப்பியோட்டம்... தேடும் போலீசார்...

police

Advertisment

சென்னையில் 60 வயத மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்தவன் தப்பியோடியுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அயனாவரத்தில் மூதாட்டி ஒருவர் தனது வயதான கணவருடன் வசித்து வருகிறார். இரு குழந்தைகளையும் இழந்த அவர்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து அதில் குடும்பம் நடத்தி வருகிறார் அந்த மூதாட்டி. சிறிய அளவு கொண்ட வீட்டில் நடக்க முடியாத கணவர் படுத்த படுக்கையாக உள்ளார். சிறிய வீடு என்பதால் ஒருவர் மட்டுமே அங்கு படுக்க முடியும். ஆகையால் இந்த மூதாட்டி தனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம்.

வழக்கம்போல மூதாட்டி உறங்கிய நிலையில் திடீரென நுழைந்த ஒருவன், கதவினை அடைத்துவிட்டு மூதாட்டியின் வாயைப் பொத்தியதுடன், மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டி சத்தம் போட்டதால் அவன் தப்பியோடியுள்ளான். பின்னர் மூதாட்டி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police investigation incident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe