An awareness rally by the police on the reverse path in Chidambaram

சிதம்பரம் இருப்பு பாதை காவல்துறை சார்பில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, ரயில் பயணிகள் விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisment

இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்சிசி இயக்கத்தின் மேஜர்.கனகராஜ், முனிராஜா, தேசிய மாணவர் படை இணை அலுவலர் ராஜா, மற்றும் பிராங்கிளின் ஜோசப், பழனியப்பன், சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் சந்திர மோகன், வணிக மேலாளர் ரிஷிகேஷ், சிதம்பரம் இருப்பு பாதை காவல் ஆய்வாளர் அருண்குமார் சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள்.

Advertisment

பல்கலைக்கழக என்சிசி மாணவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டு ரயில் நிலையத்தில் இருந்தஅண்ணாமலை நகர் ராஜேந்திரன் சிலை, சிதம்பரம் பேருந்து நிலையம், காந்தி சிலை, மீண்டும் ரயில் நிலையம் வந்தடைந்தனர். இவர்கள் பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாலியல் வன்கொடுமைகளையும், ரயில் விபத்தையும், போதைப் பொருட்களைத்தடுப்பது குறித்து கைகளில் பதாகைகள் ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.