Advertisment

எரிவாயு பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...!

சிதம்பரத்தை அடுத்துள்ள சி.தண்டேஸ்வரநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் சுபம் கேஸ் சார்பாக பஞ்சாயத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தை சுபம் கேஸ் நிர்வாக இயக்குனர்கள் புகழேந்தி, சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்பிஜி பஞ்சாயத்து மற்றும் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

 Awareness Program on Gas Use

நிகழ்ச்சியில் எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு எரிவாயு சிலிண்டரை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்றும், எரிவாயு கசிவு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு அதற்கான செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் சுபம் கேஸ் மேலாளார் ஆனந்த், ராகுல்காந்தி, ராஜா, செந்தில், அன்புராஜ் , அருணாச்சலம் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment
gas cylinder awareness
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe