Advertisment

கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைச் சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

Advertisment

இதுதொடர்பாக பேசிய அவர், மாநகராட்சி சார்பில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பேரணி, வீதி நாடகங்கள், கானா பாடல்கள், பொம்மலாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கண்காட்சி போன்றவற்றின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் குடிசை வாழிடங்களில்கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மற்றும்அதிலிருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

Advertisment

chennai corporation infection corona virus Program awareness
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe