மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும் போது அதிக விபத்து ஏற்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. விபத்தில் இவர்கள் பாதிக்கபடுவதோடு இவர்களுக்கு எதிரிலும், அருகிலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் அதிகம் விபத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/awareness in.jpg)
எனவே மாணவர்கள் 18 வயது வரை இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப்பேட்டையில் தருமம் செய்வோம் தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் பள்ளி மாணவர்கள் திறளாக கலந்து கொண்டு 18 வயதுக்கு மேல் தான் இருசக்கரவாகனத்தை தலைகவசம் அனிந்து ஓட்டுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு சைக்கிள்களை ஓட்டிகொண்டு சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த பாதகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளுகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பரங்கிப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் ஆனந்தன் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம் உள்ளிட்ட தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர்கள் பொதுமக்கள் என திறளாக கலந்துகொண்டனர். இதனை அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.
Follow Us