
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு போக்சோ சட்டம் (சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியை இளங்கோதை தலைமையில் இன்று நடைபெற்றது.
திருநாவலூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளர் சடையப்பிள்ளை கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
போக்சோ சட்டம் யார் மீது பாயும்? குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள்? சமூக ஊடகங்களின் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்குத்தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கர், தலைமைக் காவலர் செந்தில் முருகன், முதல் நிலை பெண் காவலர்கள் வள்ளி, ரொகையா பீவி, பள்ளி ஆசிரியர்கள் இம்மாகுலேட் மேரி, மேகலா, சுமதி, கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் அன்பு சோழன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Follow Us