Advertisment

குழந்தைகளின் நலனுக்காக ஆசிரியர்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பயணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்று வருகிறது.

Advertisment

திருநாவலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியை இளங்கோதை தலைமையில், பள்ளியின் ஆசிரியர்கள் தெருத்தெருவாக சென்று பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து விரைவில் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதாக, சில பெற்றோர்கள் கூறியுள்ளனர். மேலும் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி எடுப்போம் என்று, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த பயணத்தின் போது ராஜசேகரன், சத்தியமூர்த்தி, ராதாகிருஷ்ணன், ராஜகுரு, வாசுதேவன், அன்பு சோழன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

goverment schools kallakurichi teachers village
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe