75வது சுதந்திர தின விழா; வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு செய்த பள்ளி மாணவர்கள்

Awareness Independence Day programme school students

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 450 மாணவ மாணவியர்கள் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி சீருடையில் 75 என்ற எண்ணில் நின்றபடி யோகா செய்தும் கொடி வணக்கம் செலுத்தியும் சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் செய்து காட்டியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 220 பள்ளி மாணவியர்கள் 7 என்ற எண்ணிலும், 5 என்ற எண்ணில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 230 மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரெ.செல்வக்குமார் தலைமை வகித்தார். 75 என்ற எண்ணை வடிவமைத்து உதவி செய்த ஓவிய ஆசிரியர் மு. மாரியப்பன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் மூ.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பலர் இந்நிகழ்ச்சியை சிறப்பான வகையில் ஒருங்கிணைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் மற்றும் பி.வினோத்ராஜ் கலந்து கொண்டு 75 வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவு கூர்ந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த வித்தியாசமான விழிப்புணர்வு சுதந்திர தின நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Ariyalur
இதையும் படியுங்கள்
Subscribe