Awareness campaign on electrical safety

Advertisment

நேற்று (03.09.2021) காலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டக்குடி கோட்டம், சார்பில் மின்சார பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனத்தைக் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் திட்டக்குடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் M. சிவகுரு தலைமை ஏற்று நடத்தினார். உதவி செயற்பொறியாளர் K. சக்திவேல், V. விஜயலட்சுமி, B. தர்மலிங்கம், சுப்ரமணியன், உதவி மின் பொறியாளர்V.S. சண்முக செழியன் மற்றும் திட்டக்குடி பிரிவு களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சிக்கு திட்டக்குடி திமுக நகரச் செயலாளர் பரமகுரு மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரம் விநியோகித்து,மின் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.