Advertisment

திருச்சி கலெக்டர் சிவராசுக்கு விருது..! 

Award for Trichy Collector Sivarasu ..!

Advertisment

சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கவர்னரின் மனைவி தேவி புரோகித், சபாநாயகர் அப்பாவு, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாதனை விருது விழாவில் கொடிநாள் வசூலில் சாதனை படைத்த கலெக்டர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), எஸ்.சிவராசு (திருச்சி), டாக்டர் ஜெ.விஜய ராணி (சென்னை) மற்றும் சதவீத அடிப்படையில் அதிகமாக கொடிநாள் வசூல் செய்த கலெக்டர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் (திருவள்ளூர்), மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம் (காஞ்சீபுரம்), பி.காயத்திரி கிருஷ்ணன் (திருவாரூர்), அதிக கொடி நாள் வசூல் செய்த மாநகராட்சி கமிஷனராக சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் எம்.இளங்கோவன் ஆகியோருக்கு கவர்னர் விருது வழங்கி கவுரவித்தார்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe