Advertisment

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதியருக்கு வீரதீர செயல் விருது!

நெல்லை மாவட்டம் கடையத்தில் அரிவாளால்தாக்கி வீட்டில் திருட முயன்ற இரு கொள்ளையர்களை வயதான தம்பதிகளான சண்முகவேல், செந்தாமரை தம்பதி அடித்து விரட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரிடமும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Advertisment

award for Couple who chased robbers

இந்த சம்பவத்தின்போது துணிகரமாக செயல்பட்டு திருடர்களை அடித்து விரட்டிய அந்த வீரத்தம்பதியர்களை பாராட்டவும், மேலும் இதுபோன்ற நேரங்களில் எப்படி சாமர்த்தியமாக செயல்பட வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு வீர தீர செயல் விருது வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisment

award for Couple who chased robbers

நெல்லை மாவட்ட ஆட்சியர் சார்பாக வீரதீர செயலுக்கான விருதிற்கு இந்த தம்பதிகள்பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை நடக்கும் சுதந்திர தின விழாவில் எடப்பாடி இந்த விருதை வழங்க உள்ளார் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

Award CCTV footage nellai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe