Advertisment

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரணம்!

Avudaiyarkoil

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுகாவில் உள்ள ஏம்பல் கிராமத்தில் கடந்த 30ந் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி மறுநாள் அப்பகுதியில் உள்ள கிழவிதம்மம் என்ற குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி உடலில் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்தது. இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்ட நபரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை முடுக்கிவிட்டார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சாமிவேல் (எ) ராஜா (வயது 27) என்ற இளைஞரை போலிசார் கைது செய்து விசாரணைசெய்தபோதுதான் அச்சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணா்வு செய்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்தி விரைவில்தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தில் வேறு நபர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல் கட்சியினரும், உறவினர்களும் சடலத்தை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிதலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். அதன்பிறகு தமிழக முதல்வர் ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார். இன்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முதல்வர் அறிவித்த நிவாரணம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டிய நிவாரணத்தில் ஒரு என ரூ. 9.12 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் அதன் பிறகு சடலம் வாங்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் சிறுமி வீட்டிற்கு சென்ற தி.முக. மா.செ. (பொ) ரகுபதி எம்எல்.ஏ, பரணி கார்த்திகேயன், மாஜி உதயம் சண்முகம் உள்ளிட்ட தி.மு.க.வினர் ஆறுதல் சொன்னதுடன் தி.மு.க சார்பில் ரூ. 5 லட்சம் பணம் நிவாரணமாக வழங்கினார்கள். இந்த நிலையில் சிறுமியின் உறவினர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி நின்று நீதி வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

relief DMK MLA incident pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe