Advertisment

கோயில் பிரசாதங்களுக்கு ஆவின் நெய் - இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தல்!

TEMPLE4434

தமிழ்நாட்டில் கோயில் பிரசாதங்களுக்கு ஆவினில் கொள்முதல் செய்த நெய்யையே பயன்படுத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, கோயில்களில் விளக்கேற்ற, நைவேத்திய பிரசாதம் தயாரிக்க, ஆவின், வெண்ணெய், நெய் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். பக்தர்களுக்காக விற்கப்படும் பிரசாதங்களைத் தயார் செய்வதற்கும், ஆவின் நெய், வெண்ணெய் உள்ளிட்டபொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோயிலில் தீபம் ஏற்றுவதற்காகப் பக்தர்களுக்கு விற்கப்படும் அகல் விளக்குகளிலும் ஆவின் நெய்யையே நிரப்பி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

aavin Tamilnadu temples
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe