
ஆவின் பால் தட்டுப்பாட்டை சீர் செய்ய வேண்டும் எனத்தமிழக எதிர்க்கட்சி தலைவரும்அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் கொள்முதலை அதிகரித்து அனைத்து மாவட்ட பால் உற்பத்தி நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தைமுடக்கும் வேலையை திமுக அரசு திட்டமிட்டுச் செய்வதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள எடப்பாடி, ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்கத்தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)