Skip to main content

அவனியாபுரம் 'ஜல்லிக்கட்டு'- 'வாடிவாசல்' அமைக்கும் பணிகள் தீவிரம்!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
jallikkattu

 

மதுரை அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் முதல் நாளன்று 'ஜல்லிக்கட்டு' நடத்துவதற்காக வாடிவாசல் மற்றும் பேரிகார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று  'ஜல்லிக்கட்டு' போட்டி நடைபெறுவது வழக்கம். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்காக அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை தூண்கள் நடப்பட்டு, பார்வையாளர்களுக்கான பேரி கார்டு பணிகளுக்காக சவுக்கு கம்புகள் நடபட்டு வருகிறது.

 

அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடுபிடி வீரர்களுக்கு நாளை பரிசோதனை அவனியாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  அனைத்து ஆயத்தப் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்