7 players injured

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இன்று தற்போது இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.வாடிவாசலிருந்து துள்ளி வரும் காளைகளை தழுவ இரண்டாவதுசுற்றில் 75 பேர் களத்தில் உள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 636 காளைகள்500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது.

தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 மாடு பிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.அவர்களுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.சுமார் 1,095 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.