தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது.
தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் விறுவிறுப்பாக காளைகளை தழுவி காளையர்கள் களம் கண்டு வருகின்றனர். இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.