Advertisment

அனல் பறந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; முதலிடம் பிடித்த வீரர் யார்?

 Avaniyapuram jallikattu completion

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

Advertisment

இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 925 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 836 காளைகள் அனுமதிக்கப்பட்டன. போலி ஆவணம், காயங்களுடன் கொண்டுவரப்பட்ட 37 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருந்தது.

Advertisment

11 சுற்றுகளுடன் நிறைவடைந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 19 காளைகளைப் பிடித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்துள்ளார். 15 காளைகளைப் பிடித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 2வது இடத்தையும், 14 காளைகளைப் பிடித்து திருப்புவனம் முரளிதரன் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 Avaniyapuram jallikattu completion

அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

pongal avaniyapuram Jallikkattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe